சிவா சிவாய போற்றியே ! நமச்சிவாய போற்றியே!

சிவா சிவாய போற்றியே! நமச்சிவாய போற்றியே!
பிறப்பறுக்கும் ஏகனே! 
பொறுத்தருள் அநேகனே!

பரம்பொருள் உன் நாமத்தை
கரங்குவித்துப் பாடினோம்!
இறப்பிலி உன் கால்களை
சிரங்குவித்து தேடினோம்!

யாரு இவன்? யாரு இவன்?
கல்லத் தூக்கிப் போறானே!
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறானே!

கண்ணு ரெண்டு போதல!
கையு காலு ஓடல!
கங்கையத்தான் தேடிகிட்டு 
தன்னத் தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே!

எல்லையில்லாத ஆதியே
எல்லாமுணர்ந்த சோதியே
மலைமகள் உன் பாதியே
அலைமகள் உன் கைதியே

அருள்வல்லான் எம் அற்புதன்
அரும்பொருள் எம் அர்ச்சிதன்
உமை விரும்பும் உத்தமன்
உருவிலா எம் உருத்திரன்

ஒளிர்விடும் எம் தேசனே
குளிர்மலை தன் வாசனே
எழில்மிகு எம் நேசனே
அழித்தொழிக்கும் ஈசனே

நில்லாமல் ஆடும் அந்தமே
கல்லாகி நிற்கும் உந்தமே
கல்லா எங்கட்கு சொந்தமே
எல்லா உயிர்க்கும் பந்தமே!


Comments

Popular posts from this blog

திருமதி பழனிச்சாமி ! பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில்

குணா - கண்மணி அன்போட காதலன்

செந்தமிழ் நாட்டு திருமகள்